நலம் தரும் குத்துவிளக்கு

‘குத்து விளக்கு’ தெய்வீகமானது. தெய்வ அம்சம் பொருந்தியது என்பர்.
இதன் அடிப்பாகம் பிரம்ம அம்சம் என்றும், நீண்ட நடுப்பகுதி மகாவிஷ்ணு அம்சம்,
மேற்பகுதி சிவ அம்சம் எனவும் கூறப்படுகிறது. விளக்கில் ஊற்றும்
நெய் – நாதம், திரி – பிந்து, சுடர் – அலை மகள், சுடர் – கலை மகள், தீ -
மலை மகள் இப்படி அனைத்தும் சேர்ந்ததே குத்து விளக்கு என்பர்.இந்த விளக்கை நன்கு மஞ்சள் தடவி, குங்குமமிட்டு, பூச்சுற்றி அலங்காரம் செய்ய வேண்டும்.


பஞ்சுத் திரிதான் விளக்கேற்ற மிகவும் உகந்தது. மெல்லிய திரிகளாகத் திரித்து வைத்துக் கொள்ள வேண்டும். திரிக்கும்போது ஒரு பக்கம் மட்டுமே உருட்ட வேண்டும். குத்துவிளக்கின் ஐந்து முகங்களையும் ஏற்றித் தொழுவது நலம் தரும். முதலில் எண்ணெய் அல்லது நெய் ஊற்றிய
பிறகுதான் திரியிட்டுத் தீபம் ஏற்ற வேண்டும்.


குத்து விளக்கைத் துலக்கி சுத்தப்படுத்தும் பணியினைச் செய்ய குறிப்பிட்ட நாள்கள் உண்டு.
ஞாயிறு, திங்கள், வியாழன், சனி கிய நாள்களில் மட்டும்தான் குத்து விளக்கினைத் தேய்த்தல் வேண்டும்.


திங்கள் நடு இரவு முதல் புதன் நடு இரவு வரை குபேர தன தாட்சாயணியும்,
குககுரு தன தாட்சாயணியும் குத்து விளக்கில் பூரணமாகக் குடியிருப்பதாகக் கூறப்படுகிறது.
எனவே இந்த நாள்களில் விளக்கினைத் தேய்த்துக் கழுவுவதால் இந்தச் சக்திகள்
விலகிப் போகும் என நம்புகின்றனர். வெள்ளியன்று கழுவுவதால் அதில்
குடியிருக்கும் குபேர சங்க நிதியட்சிணி விலகிப் போய் விடுவாள்
என்பதும் மக்களின் பரவலான நம்பிக்கை.


விளக்கை முதலில் நீரால் கழுவிப் பின்பு எண்ணெய்ப் பிசுக்கு நீங்கும் வண்ணம்
தேங்காய் நார் கொண்டு பச்சைப்பயறு, வெந்தயம், பச்சரிசி, எலுமிச்சைத் தோல்
சேர்த்து அரைத்த சிகைக்காய்ப் பொடி போட்டுத் தேய்க்க வேண்டும்.
கடைசியில் எலுமிச்சைச்சாறு ஊற்றி சுத்தப்படுத்தித் தண்ணீர் ஊற்றி நன்கு சுத்தப்படுத்த வேண்டும்.


ஞாயிறன்று விளக்கைத் துலக்கி தீபம் போடுவதால் கண் சம்பந்தமான நோய்கள் அகலும்.

மனம் நிலைப்பட திங்கள் அன்று தீபம் போட வேண்டும்.

‘குரு பார்வை’ இருந்தாலும் கடினமான வேலைகளையும் கூட எந்தவிதப் பிரச்சினையுமில்லாமல்
எளிதாகச் செய்ய முடியுமே! வியாழன் அன்று தீபமேற்றினால் ‘குருவின் பார்வையும் -
அது தரும் கோடி நன்மையும்’ நமக்கே கிடைக்கும்.

வாகன விபத்துக்களைத் தவிர்க்க உதவுவதுதான் சனியன்று விளக்குத் துலக்கி நாம் போடும் தீபம்.

மற்ற நாள்களில் விளக்குத் துலக்காமல் தீபம் போடலாம்.


விளக்குத் துலக்காத நாள்களில் விசேஷமான நோன்பு, பூஜைகள் வந்தால்,
விளக்கை நீரில் கழுவித் துடைத்து விபூதி கொண்டு தேய்த்துச் சுத்தமான
துணியினால் விளக்கைத் துடைத்து தீபம் ஏற்றலாம்.

விளக்கில்லாத கோயிலில் ஏதாவது ஒரு திசையில் பஞ்சுத் திரி போட்டுத் தீபம்
ஏற்றினால் சூரிய பகவானின் பூரண அருள் கிடைக்கும். இது ஞாயிற்றுக்கிழமைகளில்
செய்யப்பட வேண்டிய ஒன்று. தாமரை நூல் தீபம், மனதுக்குப் பிடித்த துணையுடன் இணைத்து வைக்கும்.

வாழைத் தண்டின் நூலில் திரி செய்து தீபம் ஏற்றுவது மக்கட் பேற்றைத் தரும்.

வெள்ளெருக்குப் பட்டையில் திரித்துத் தீபம் ஏற்றுவது காற்று சேட்டையை விலகச் செய்யும்.

பஞ்சமி திதியில் விளக்கேற்றுவது அகால மரணத்தைத் தவிர்க்கும். புதிதாக நெய்த பருத்தி
ஆடையில் அரைத்த சந்தனம், பன்னீர் சேர்த்துத் தடவிக் காய வைத்து,
அதைத் திரியாக்கி வடக்குமுகமாக வைத்து, ‘பஞ்ச தீப’ எண்ணெய் ஊற்றித்
திருவாதிரை நட்சத்திரத்தன்று தொடர்ந்து ஓராண்டு விளக்கேற்ற நோய்களின் வேகம் குறையும்.
பல காலமாக வராமலிருந்த பணம் தேடி வரும். இது அருந்ததிக்குச் சாவித்திரி தேவி அருளிய வாக்கு.

ஒரு தீபம் ஏற்றுவது தவறு. சிறிய ஜோதி விளக்கானாலும் இரண்டு திரி போட்டு
இரண்டு தீபம் ஏற்ற வேண்டும். இது குடும்பத்திற்குப் பல நலன்களைக் கொண்டு வந்து சேர்க்கும்.

ஆயுள் அதிகரிக்க, கிரகதோஷம் நீங்க...

வேயுறு தோளி பங்கன் விடம் உண்ட கண்டன்


மிக நல்ல வீணை தடவி


மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என்


உளமே புகுந்த அதனால்


ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி


சனி பாம்பு இரண்டும் உடனே


ஆசறும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல


அடியார் அவர்க்கு மிகவே.


பொருள்: மூங்கில் போன்ற தோள்களை உடைய அம்பிகையை பாகமாகக் கொண்டவனும், நஞ்சை உண்ட கழுத்தினை உடையவனும், வீணையை வாசித்து மகிழ்பவனும், குற்றமற்ற சந்திரனையும், கங்கையையும் தன் முடிமேல் அணிந்தவனுமான சிவபெருமான் என் உள்ளத்தில் புகுந்து அருள்புரிந்தான். அதனால், சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகிய நவக்கிரகங்களாலும் உண்டாகும் தீங்குகள் உடனே அகலும். மேலும் நன்மைகளை வழங்கும். பக்தர்களுக்கு அவை கூடுதல் நன்மைகளைத் தரும்.

தலைவிதி சரியாக...

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்


மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்


கருவாய் உயிராய் கதியாய் விதியாய்


குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


பொருள்: உருவம் உடையவனாகவும், உருவமில்லா அருவமாகத் திகழ்பவனும், எங்கும் நிறைந்து விளங்குபவனும், தன்னை வெளிப்படுத்தாமல் மறைந்து இல்லாதது போல் இருப்பவனும், மணம் மிக்கவனும், மலர் போன்ற மென்மையானவனும், நவமணிகள் போன்று திகழ்பவனும், ஒளியாகிய பிரகாசமுடையவனும், உலகிற்கே கருவாகத் திகழ்பவனும், அனைத்து உயிர்களாக விளங்குபவனும், யாவர்க்கும் கதியாக நிற்பவனும், விதியை நிர்ணயிப்பவனுமாக திகழ்பவனும், குகனுமாகிய முருகப்பெருமானே! நீயே எனக்கு குருநாதனாக இருந்து அருள்புரிய வேண்டும்.


விளக்கம்: கந்தர் அனுபூதியில் வரும் இந்தப்பாடல் அருணகிரிநாதரால் பாடப்பட்டது.




இனி எல்லாம் சுகமே!


இந்தப் பகுதியில் நம் சிரமங்கள் நீங்கி நன்மை பெறுவதற்கான ஸ்தோத்திரப் பாடல்கள் வெளிவரும்.இவற்றை தினமும்


16 முறை பாராயணம் செய்து பலனடையுங்கள்.

பூவும் பலனும்

அம்மனுக்கு படைக்கப்படும் ஒவ்வொரு விதமான பூவிற்கும் ஒரு பலன் உண்டு. இதனை சூபுஷ்ப விதி' எனும் நூலில் காணலாம். அதில்


நல்ல மனைவி கிடைக்க - பாதிரி பூ


ஆபரணம் சேர - பலாச பூ


வாகன வசதி கிடைக்க - தாழம்பூ


உயர்ந்த பதவி கிடைக்க - முல்லைப்பூ


விருப்பம் ஈடேற - மாதுளம்பூ


பகைமை, எதிரி விலக - தாமரைப்பூ


இதில் தாழம்பூவை நீளமாக தொகுத்து பாவாடை போன்றும் சாத்தலாம்.அதன் நுனிப்பகுதி மேலிருக்குமாறு சாத்த விரைவில் திருமணமும், கீழிருக்குமாறு சாத்த ஆடை, ஆபரண சேர்க்கையும் கிடைக்கும்.

லிங்கங்களும் பயன்களும்

சிவ ஆகமப்படி 16 வகையான பொருள்களால் லிங்க ரூபம் செய்து வழிபடுதல் பெரும் சிறப்பென்று ரிஷிகள் கூறுகின்றனர்.
1. புற்றுமண் லிங்கம்: முத்தி;
2. ஆற்று மணல் லிங்கம்: பூமிலாபம்;
3. பச்சரிசி லிங்கம்: பொருள்பெருக்கம்;
4. சந்தன லிங்கம்: எல்லா இன்பங்கள்;
5. மலர்மாலை லிங்கம்: நீண்ட வாழ்நாள்;
6. அரிசிமாவு லிங்கம்: உடல்வலிமை;
7. பழம் லிங்கம்: நல்லின்ப வாழ்வு;
8. தளிர் லிங்கம்: நல்லகுணம்;
9. தண்ணீர் லிங்கம்: எல்லா மேன்மை;
10. சோறு (அன்னம்) லிங்கம்: உணவுப்பெருக்கம்;
11. முடிச்சிட்ட நாணல் (கூர்ச்சம்) லிங்கம்: முக்தி;
12. சர்க்கரை,வெல்லம் லிங்கம்: விரும்பிய இன்பம்;
13. பசுவினசாணம் லிங்கம்: நோயற்ற வாழ்வு;
14. பசுவெண்ணெய் லிங்கம்: மனமகிழ்ச்சி;
15. உருத்திராட்க்ஷ லிங்கம்: நல்ல அறிவு;
16. திருநீற்று (விபூதி) லிங்கம்: எல்லாவகை செல்வம்

சரஸ்வதி தேவி ஸ்லோகம்


சுராசுர சேவித பாத பங்கஜா

கரே விராஜத் கமனீய புஸ்தகா

விரிஞ்சி பத்னீ கமலாசனஸ் திதா

சரஸ்வதீ ந்ருத்யது வாசி மே சதா


பொருள்: தாமரையில் வீற்றிருப்பவளும், தேவர்கள் வணங்கும் பாத கமலங்களை உடையவளும், அழகிய புத்தகத்தை கரத்தில் கொண்டவளும், பிரம்மதேவரின் துணைவியுமான சரஸ்வதி தேவியே என் வாக்கில் மகிழ்ந்து இருப்பாயாக.

ஸ்ரீ ராம த்யான ஸ்தோத்ரங்கள்


ஆபதாம் அபஹர்த்தாரம் தாதாரம் ஸர்வ ஸம்பதாம்|
லோகாபிராமம் ஸ்ரீராமம் பூயோ பூயோ நமாம்யஹம் ||

ஆர்த்தாநாம் ஆர்த்தி ஹந்தாரம் பீதனாம்பீதி நாச'னம் |
த்விஷதாம் காலதண்டம் தம் ராமசந்த்ரம் நமாம்யஹம் ||

நம: கோதண்ட ஹஸ்தாய ஸந்தீக்ருத ச'ராய ச |
கண்டிதாகில தைத்யாய ராமாயா 'பந்நிவாரிணே ||

ராமாய ராமபத்ராய ராமசந்த்ராய வேதஸே |
ரகுநாதாய நாதாய ஸீதாயா: பதயே நம: ||

அக்ரதஃ ப்ருஷ்டதச்' சைவ பார்ச்'வதச்'ச மஹாபலௌ |
ஆகர்ணபூர்ண தன்வாநௌ ரக்ஷேதாம் ராமலக்ஷ்மணௌ ||

ஸன்னத்த: கவச: கட்கீ சாப பாணதரோ யுவா |
கச்சன் மமாக்ரதோ நித்யம் ராம: பாதுஸலக்ஷ்மண: ||

அச்யுதாநந்த கோவிந்த நாமோச்சாரண பேஷஜாத் |
நச்'யந்தி ஸகலாரோகா: ஸத்யம் ஸத்யம் வதாம்யஹம் ||

ஸத்யம் ஸத்யம் புனஸ் ஸத்யம் உத்ருத்ய புஜமுச்யதே |
வேதாச்'சா'ஸ்த்ராத் பரம்நாஸ்தி நதைவம் கேச'வாத்பரம் ||

ச'ரீரே ஜர்ஜரிபூதே வ்யாதிக்ரஸ்தே களேபரே |
ஔஷதம் ஜாந்ஹவீ தோயம் வைத்யோ நாராயணோ ஹரி: ||

ஆலோட்ய ஸர்வசா'ஸ்த்ராணி விசார்ய ச புன: புன: |
இதமேகம் ஸுநிஷ்பந்நம் த்யேயோ நாராயணோ ஹரி: ||

காயேந வாசா மநஸா இந்த்ரியைர்வா புத்யாத்மநா வா ப்ரக்ருதே: ஸ்வபாவாத் |
கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை நாராயணாயேதி ஸமர்ப்பயாமி ||

யதக்ஷர பதப்ரஷ்டம் மாத்ராஹீனம்து யத்பவேத் |
தத்ஸர்வம் க்ஷம்யதாம் தேவ நாராயண நமோஸ்துதே ||

விஸர்க்க பிந்து மாத்ராணி பதபாதாக்ஷராணி ச |
ந்யூநாநி ச அதிரிக்தாநி க்ஷமஸ்வ புருஷோத்தம ||