ஆயுள் அதிகரிக்க, கிரகதோஷம் நீங்க...

வேயுறு தோளி பங்கன் விடம் உண்ட கண்டன்


மிக நல்ல வீணை தடவி


மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என்


உளமே புகுந்த அதனால்


ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி


சனி பாம்பு இரண்டும் உடனே


ஆசறும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல


அடியார் அவர்க்கு மிகவே.


பொருள்: மூங்கில் போன்ற தோள்களை உடைய அம்பிகையை பாகமாகக் கொண்டவனும், நஞ்சை உண்ட கழுத்தினை உடையவனும், வீணையை வாசித்து மகிழ்பவனும், குற்றமற்ற சந்திரனையும், கங்கையையும் தன் முடிமேல் அணிந்தவனுமான சிவபெருமான் என் உள்ளத்தில் புகுந்து அருள்புரிந்தான். அதனால், சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகிய நவக்கிரகங்களாலும் உண்டாகும் தீங்குகள் உடனே அகலும். மேலும் நன்மைகளை வழங்கும். பக்தர்களுக்கு அவை கூடுதல் நன்மைகளைத் தரும்.