தீபத்திற்கு [விளக்கிற்கு] நெய்விட்டு தீபம் ஏற்றுவது மிகச் சிறப்பு. சகலவித செல்வ சுகத்தையும் இல்லத்திற்கும் – இல்லறத்திற்கும் நலனை தருகிறது.
நல்லெண்ணெய்:
நல்லெண்ணெயில் தீபமிடுவதால் சகல பீடைகளும் விலகிவிடும்.
விளக்கெண்ணெய்:
தேவதா, வசியம், புகழ், ஜீவன சுகம், சுற்றத்தார் சுகம், தாம்பத்திய சுகம் விருத்தி செய்கிறது.
திரியின் வகையில் பஞ்சு
இலவம் பஞ்சு திரித்துப் போடுவது மிகவும் நல்லது.
தாமரைத் தண்டு:
தாமரை தண்டு திரிந்து ஏற்றுவது முன் வினைப் பாவத்தைப் போக்கும்.
செல்வம் நிலைத்து நிற்கும்.
[ வாழை தண்டில் திரியிலிடுவது சிறப்பு]
துணி:
புது வெள்ளை துணியில் [அல்லது வெள்ளை வேட்டி] பன்னீரில் நனைந்து காய
வைத்து திரியாக பயன் படுத்த உத்தம பலனை காணலாம்.

திசைகளும் பலனும்
கிழக்கு
கிழக்கு திசை தீபம் ஏற்றி வழிபட்டால் துன்பம் ஒழியும் , பீடைகள் அகலும்.
மேற்கு:
மேற்கு திசையில் தீபம் ஏற்றி வழிபடக் கடன் தொல்லை , சனி பீடை, கிரக தோஷம்
நீங்கும்.
வடக்கு:
வட திசையில் தீபம் ஏற்ற திரண்ட செல்வமும், திருமணத் தடையும், சுபகாரியத் தடை,
கல்வி தடை நீங்கும். சர்வ மங்களமும் உண்டாகும்.
வேப்பெண்ணை, நெய், இலுப்பை எண்ணெய் இவை மூன்றும் கலந்து தீபமிடுவதனால்
செல்வம் உண்டாகும். இது குல தெய்வத்திற்கு உகந்தது.
நெய், விளக்கெண்ணெய், வேப்பெண்ணெய், இலுப்பை எண்ணெய், தேய்காய் எண்ணெய்
இந்த ஐந்து எண்ணெய் சேர்கையில் 45 நாட்கள் பூசை செய்கிறோரோ அவருக்கு தேவியின் அருள் சக்தி உண்டாகும்.
இறைவனுக்கு உகந்த எண்ணெய்:
மஹாலட்சுமி : நெய்.
நாராயணன் : நல்லெண்ணெய்