திருக்கோவிலில் தீபம் ஏற்றுதல்


ஒளியில் தேஜஸ் ஆக இருக்கிறேன் என கண்ணபிரான் கீதையில் அருளி உள்ளார்.ஒருவர் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் தருணத்தில் திருக்கோவில் கருவறையில் எரிந்து கொண்டிருக்கும் அணையா விளக்கில் சேர்க்கப்படும் நெய்யானது அவ்வுயிரை காப்பாற்றும் சக்தி வாய்ந்ததாகும்.

எளி அனல் ஏற்றி இறைவனை வழிபட வேண்டும் என திருமூலர் திருமந்திரத்தில் தீபம் ஏற்றுவதனை அருளியுள்ளார்.

திருக்கோவிலில் ஏற்றப்படும் தீபத்தின் ஒளியானது சூரியனின் மூலம் இறைவனை அடைந்து உடனுக்குடன் அதற்க்கான நற்பலன்களை நமக்கு அளிக்கின்றன.

வேதாரண்யம் திருக்கோவில் அணையப்போகும் விளக்கை தூண்டிய எலி மறுபிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாக பிறந்ததாக தல வரலாறு கூறுகின்றது. இதிலிருந்து திருக்கோவில்கலில் ஏற்றப்படும் தீபத்தின் மகிமையை அறிந்து கொள்ளலாம்.