ஆயுள் அதிகரிக்க, கிரகதோஷம் நீங்க...

வேயுறு தோளி பங்கன் விடம் உண்ட கண்டன்


மிக நல்ல வீணை தடவி


மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என்


உளமே புகுந்த அதனால்


ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி


சனி பாம்பு இரண்டும் உடனே


ஆசறும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல


அடியார் அவர்க்கு மிகவே.


பொருள்: மூங்கில் போன்ற தோள்களை உடைய அம்பிகையை பாகமாகக் கொண்டவனும், நஞ்சை உண்ட கழுத்தினை உடையவனும், வீணையை வாசித்து மகிழ்பவனும், குற்றமற்ற சந்திரனையும், கங்கையையும் தன் முடிமேல் அணிந்தவனுமான சிவபெருமான் என் உள்ளத்தில் புகுந்து அருள்புரிந்தான். அதனால், சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகிய நவக்கிரகங்களாலும் உண்டாகும் தீங்குகள் உடனே அகலும். மேலும் நன்மைகளை வழங்கும். பக்தர்களுக்கு அவை கூடுதல் நன்மைகளைத் தரும்.

தலைவிதி சரியாக...

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்


மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்


கருவாய் உயிராய் கதியாய் விதியாய்


குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.


பொருள்: உருவம் உடையவனாகவும், உருவமில்லா அருவமாகத் திகழ்பவனும், எங்கும் நிறைந்து விளங்குபவனும், தன்னை வெளிப்படுத்தாமல் மறைந்து இல்லாதது போல் இருப்பவனும், மணம் மிக்கவனும், மலர் போன்ற மென்மையானவனும், நவமணிகள் போன்று திகழ்பவனும், ஒளியாகிய பிரகாசமுடையவனும், உலகிற்கே கருவாகத் திகழ்பவனும், அனைத்து உயிர்களாக விளங்குபவனும், யாவர்க்கும் கதியாக நிற்பவனும், விதியை நிர்ணயிப்பவனுமாக திகழ்பவனும், குகனுமாகிய முருகப்பெருமானே! நீயே எனக்கு குருநாதனாக இருந்து அருள்புரிய வேண்டும்.


விளக்கம்: கந்தர் அனுபூதியில் வரும் இந்தப்பாடல் அருணகிரிநாதரால் பாடப்பட்டது.




இனி எல்லாம் சுகமே!


இந்தப் பகுதியில் நம் சிரமங்கள் நீங்கி நன்மை பெறுவதற்கான ஸ்தோத்திரப் பாடல்கள் வெளிவரும்.இவற்றை தினமும்


16 முறை பாராயணம் செய்து பலனடையுங்கள்.

பூவும் பலனும்

அம்மனுக்கு படைக்கப்படும் ஒவ்வொரு விதமான பூவிற்கும் ஒரு பலன் உண்டு. இதனை சூபுஷ்ப விதி' எனும் நூலில் காணலாம். அதில்


நல்ல மனைவி கிடைக்க - பாதிரி பூ


ஆபரணம் சேர - பலாச பூ


வாகன வசதி கிடைக்க - தாழம்பூ


உயர்ந்த பதவி கிடைக்க - முல்லைப்பூ


விருப்பம் ஈடேற - மாதுளம்பூ


பகைமை, எதிரி விலக - தாமரைப்பூ


இதில் தாழம்பூவை நீளமாக தொகுத்து பாவாடை போன்றும் சாத்தலாம்.அதன் நுனிப்பகுதி மேலிருக்குமாறு சாத்த விரைவில் திருமணமும், கீழிருக்குமாறு சாத்த ஆடை, ஆபரண சேர்க்கையும் கிடைக்கும்.

லிங்கங்களும் பயன்களும்

சிவ ஆகமப்படி 16 வகையான பொருள்களால் லிங்க ரூபம் செய்து வழிபடுதல் பெரும் சிறப்பென்று ரிஷிகள் கூறுகின்றனர்.
1. புற்றுமண் லிங்கம்: முத்தி;
2. ஆற்று மணல் லிங்கம்: பூமிலாபம்;
3. பச்சரிசி லிங்கம்: பொருள்பெருக்கம்;
4. சந்தன லிங்கம்: எல்லா இன்பங்கள்;
5. மலர்மாலை லிங்கம்: நீண்ட வாழ்நாள்;
6. அரிசிமாவு லிங்கம்: உடல்வலிமை;
7. பழம் லிங்கம்: நல்லின்ப வாழ்வு;
8. தளிர் லிங்கம்: நல்லகுணம்;
9. தண்ணீர் லிங்கம்: எல்லா மேன்மை;
10. சோறு (அன்னம்) லிங்கம்: உணவுப்பெருக்கம்;
11. முடிச்சிட்ட நாணல் (கூர்ச்சம்) லிங்கம்: முக்தி;
12. சர்க்கரை,வெல்லம் லிங்கம்: விரும்பிய இன்பம்;
13. பசுவினசாணம் லிங்கம்: நோயற்ற வாழ்வு;
14. பசுவெண்ணெய் லிங்கம்: மனமகிழ்ச்சி;
15. உருத்திராட்க்ஷ லிங்கம்: நல்ல அறிவு;
16. திருநீற்று (விபூதி) லிங்கம்: எல்லாவகை செல்வம்

சரஸ்வதி தேவி ஸ்லோகம்


சுராசுர சேவித பாத பங்கஜா

கரே விராஜத் கமனீய புஸ்தகா

விரிஞ்சி பத்னீ கமலாசனஸ் திதா

சரஸ்வதீ ந்ருத்யது வாசி மே சதா


பொருள்: தாமரையில் வீற்றிருப்பவளும், தேவர்கள் வணங்கும் பாத கமலங்களை உடையவளும், அழகிய புத்தகத்தை கரத்தில் கொண்டவளும், பிரம்மதேவரின் துணைவியுமான சரஸ்வதி தேவியே என் வாக்கில் மகிழ்ந்து இருப்பாயாக.

ஸ்ரீ ராம த்யான ஸ்தோத்ரங்கள்


ஆபதாம் அபஹர்த்தாரம் தாதாரம் ஸர்வ ஸம்பதாம்|
லோகாபிராமம் ஸ்ரீராமம் பூயோ பூயோ நமாம்யஹம் ||

ஆர்த்தாநாம் ஆர்த்தி ஹந்தாரம் பீதனாம்பீதி நாச'னம் |
த்விஷதாம் காலதண்டம் தம் ராமசந்த்ரம் நமாம்யஹம் ||

நம: கோதண்ட ஹஸ்தாய ஸந்தீக்ருத ச'ராய ச |
கண்டிதாகில தைத்யாய ராமாயா 'பந்நிவாரிணே ||

ராமாய ராமபத்ராய ராமசந்த்ராய வேதஸே |
ரகுநாதாய நாதாய ஸீதாயா: பதயே நம: ||

அக்ரதஃ ப்ருஷ்டதச்' சைவ பார்ச்'வதச்'ச மஹாபலௌ |
ஆகர்ணபூர்ண தன்வாநௌ ரக்ஷேதாம் ராமலக்ஷ்மணௌ ||

ஸன்னத்த: கவச: கட்கீ சாப பாணதரோ யுவா |
கச்சன் மமாக்ரதோ நித்யம் ராம: பாதுஸலக்ஷ்மண: ||

அச்யுதாநந்த கோவிந்த நாமோச்சாரண பேஷஜாத் |
நச்'யந்தி ஸகலாரோகா: ஸத்யம் ஸத்யம் வதாம்யஹம் ||

ஸத்யம் ஸத்யம் புனஸ் ஸத்யம் உத்ருத்ய புஜமுச்யதே |
வேதாச்'சா'ஸ்த்ராத் பரம்நாஸ்தி நதைவம் கேச'வாத்பரம் ||

ச'ரீரே ஜர்ஜரிபூதே வ்யாதிக்ரஸ்தே களேபரே |
ஔஷதம் ஜாந்ஹவீ தோயம் வைத்யோ நாராயணோ ஹரி: ||

ஆலோட்ய ஸர்வசா'ஸ்த்ராணி விசார்ய ச புன: புன: |
இதமேகம் ஸுநிஷ்பந்நம் த்யேயோ நாராயணோ ஹரி: ||

காயேந வாசா மநஸா இந்த்ரியைர்வா புத்யாத்மநா வா ப்ரக்ருதே: ஸ்வபாவாத் |
கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை நாராயணாயேதி ஸமர்ப்பயாமி ||

யதக்ஷர பதப்ரஷ்டம் மாத்ராஹீனம்து யத்பவேத் |
தத்ஸர்வம் க்ஷம்யதாம் தேவ நாராயண நமோஸ்துதே ||

விஸர்க்க பிந்து மாத்ராணி பதபாதாக்ஷராணி ச |
ந்யூநாநி ச அதிரிக்தாநி க்ஷமஸ்வ புருஷோத்தம ||

குரு ராகவேந்திரர்

சரஸ்வதி பூஜை


சகலகலாவல்லிமாலை

1.

வெண்தாமரைக்கு அன்றி நின்பதம் தாங்கஎன் வெள்ளையுள்ளம்
தண்தாமரைக்குத் தகாது கொலோ சகம் ஏழும் அளித்து,
உண்டான் உறங்க, ஒழித்தான் பித்தாக,உண்டாக்கும் வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே! சகலகலாவல்லியே!

2.

நாடும் சொற்சுவை பொருட்சுவை தோய்தர நாற்கவியும்
பாடும் பணியில் பணித்து அருள்வாய்! பங்கய ஆசனத்தில்
கூடும் பசும்பொற்கொடியே! கனதனக் குன்றும் ஐம்பால்
காடும் சுமக்கும் கரும்பே! சகலகலாவல்லியே!

3.

அளிக்கும் செழுந்தமிழ்த் தெள் அமுது ஆர்ந்து உன் அருட்கடலில்
குளிக்கும் படிக்குஎன்று கூடுங்கொலோ?உளம்கொண்டு தெள்ளித்

தெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழைசிந்தக்கண்டு
களிக்கும் கலாபமயிலே! சகலகலாவல்லியே!

4.

தூக்கும் பனுவல் துறை தோய்ந்த கல்வியும்சொற்சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்து அருள்வாய்! வடநூல் கடலும்
தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவில் நின்று
காக்கும் கருணைக் கடலே! சகலகலாவல்லியே!

5.

பஞ்சுஅப்பு, இதம்தரும், செய்ய,பொற்பாதபங்கேருகம்என்
நெஞ்சத்தடத்து அலராதது என்னே? நெடுந்தாள் கமலத்து
அஞ்சத்துவசம் உயர்ந்தோன் செந்நாவும் அகமும் வெள்ளைக்
கஞ்சத்தவிசு ஒத்திருந்தாய்! சகலகலாவல்லியே!

6.

பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும் யான்
எண்ணும் பொழுது எளிது எய்தநல்காய்! எழுதா மறையும்
விண்ணும் புவியும் புனலும் கனலும்வெங்காலும்,அன்பர்
கண்ணும் கருத்தும் நிறைந்தாய்! சகலகலாவல்லியே!

7.

பாட்டும் பொருளும் பொருளால் பொருந்தும் பயனும் என்பால்
கூட்டும்படி உன்கடைக்கண்நல்காய்! உளம்கொண்டு தொண்டர்
தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால் அமுதம்தெளிக்கும் வண்ணம்
காட்டும் வெள் ஓதிமப்பேடே! சகல்கலாவல்லியே!

8.

சொற்விற்பன்னமும், அவதானமும், கல்விசொல்லவல்ல
நல்வித்தையும் தந்து அடிமை கொள்வாய்!நளின ஆசனம்சேர்
செல்விக்கு அரிது என்று ஒருகாலமும் சிதையாமை நல்கும்
கல்விப் பெறுஞ்செல்வப்பேறே! சகலகலாவல்லியே!

9.

சொற்கும் பொருட்கும் உயிராம் மெய்ஞானத்தில் தோற்றம் என்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்?நிலம்தோய் புழைக்கை
நற்குஞ்சரத்தின் பிடியோடு அரசன்னம்நாணநடை
கற்கும் பதாம்புயத்தாளே! சகலகலாவல்லியே!

10.

மண்கண்ட, வெண்குடைக்கீழாக, மேற்பட்டமன்னரும், என்
பண்கண்ட அளவில், பணியச்செய்வாய்! படைப்போன் முதலாம்
விண்கண்ட தெய்வம் பல்கோடி உண்டேனும்,விளம்பில் உன்போல்
கண்கண்ட தெய்வம் உளதோ? சகலகலாவல்லியே!

பொருள்:

1. உலகு ஏழும் காத்து, அவற்றை உண்ட விஷ்ணுதுயில் கொண்டிருக்க, அவற்றை
அழிப்பவராகிய சிவன் பித்தனாகுமாறு, படைக்கும் ஆற்றல் கொண்ட பிரம்மன்சுவைக்கும் கரும்பான சகலகலாவல்லியே! உன்திருவடிகளைத்தாங்க, வெண்தாமரைக்கே அல்லாமல், என்னுடைய தூய உள்ளமான, குளிர்ச்சி பொருந்திய தாமரைக்குத் தகுதி இல்லையோ?

2. தாமரை மலரால் ஆன ஆசனத்தில் அமர்ந்திருக்கின்ற பசுமையான பொற்கொடியாளே! குன்று போன்ற தனங்களையும், ஐந்து வகையாகப் புனையப்பெற்ற கூந்தல் வனத்தைச் சுமந்துள்ள கரும்பனைய சகலகலாவல்லியே! சொற்சுவை பொருட்சுவை தோய்ந்த நால்வகை கவிகளாகிய ஆசு, மதுரம்,சித்திரம், வித்தாரம் ஆகியவற்றைப்பாடும் பணியை எனக்கு அருள் புரிவாய்! சகலகலாவல்லியே!

3. உள்ளம் கனிந்து, தெளிவாகப் பனுவல்களைத் தெளிக்கும் புலவர்களின் கவிமழை
பொழியக்கண்டு களிப்படையும் தோகைமயிலாளே! சகலகலாவல்லியே! நீ அருளிய
செழிப்பான செழுந்தமிழ் அமுதத்தை அருந்தி, உன்னுடைய அருள் நிறைந்த கடலில்
குளிப்பதற்கு என்னால் இயலுமோ?

4. இனிமையான செந்தமிழ்ச் செல்வத்தையும் சமஸ்கிருதக் கடலையும் அடியார்களின்
சிறப்பான நாவினில் வீற்றிருந்து காக்கும் கருணைக்கடலான சகலகலாவல்லியே!
சீர்தூக்கிப்பெறுகின்ற பலநூல் துறைகளிலும் சார்ந்த கல்வியையும், சொற்சுவைநிறைந்த வாக்கையும் எனக்குப் பெருகும்படி அருள்புரிவாயாக!

5. நெடும் தண்டு உடைய தாமரையைக் கொடியாகக் கொண்ட பிரம்மனின் செம்மையான நாவிலும், அவன் மனத்திலும், உன்னுடையவெண்தாமரை மலர் ஆசனத்தைப்போன்று கருதி வீற்றிருக்கும் சகலகலாவல்லியே! நன்மையளிக்கின்ற செம்பஞ்சு போன்ற சிவந்த அழகுமிக்க உன் பொற்பாதங்களாகியதாமரை மலர்கள் என் நெஞ்சமாகிய தடாகத்தில் மலராதது ஏனோ?

6. விண்ணிலும்,மண்ணிலும்,நீரிலும் நெருப்பிலும், காற்றிலும், வேதத்திலும், அன்பர்
கண்ணிலும், கருத்திலும் நிறைந்திருக்கும்சகலகலாவல்லியே!முத்தமிழான பண்ணும்
பரதமும் கல்வியும் இனிமையான கவிதையும் நான் நினைக்கும்போது எளிதில் எய்துமாறு எனக்கு அருள் புரிவாயாக!

7.கலைத்தமிழாகிய சுவையான பால் அமுதத்தை, மனம் உவந்து தொண்டர்கள்
படைக்கின்றனர்; அதனைத் தெளிவுறசெய்யவல்ல வெண்ணிறப் பெண் அன்னம் போன்ற சகலகலாவல்லியே! பாடலையும் அதன் பொருளையும், பொருளால் ஏற்படக்கூடிய பயனையும் என்னிடத்தில் சேருமாறு உன் கடைக்கண் பார்வையை அருள்வாயாக!

8. தாமரை மலரில் வீற்றிருக்கும் லட்சுமிக்கு அரிது என்பதால் நீ, எக்காலத்திலும்
அழியாத தன்மையை நல்கும் கல்வியாகிய பெருஞ்செல்வத்தின் பயனான சகலகலாவல்லியே! சிறப்பு மிகு சொல் திறமையும், அவதானம் புரியும் ஆற்றலும், கல்வி போதிக்கத்தக்க புலமையும் எனக்கு அளித்து ஆட்கொள்வாயாக!

9.பூமியைத்தொடக்கூடிய துதிக்கையையுடைய பெண்யானையோடு ராஜ அன்னமும்கூட நாணும் வண்ணம் நடைபயிலுகின்றாய்!தாமரையைபோன்ற திருத்தாள்களையுடைய சகலகலாவல்லியே! சொல்லுக்கும் பொருளுக்கும் உயிராகியமெய்ஞானத்தின் காட்சியாகத் திகழக்கூடிய உன்னை நினைக்கக்கூடிய திறமைசாலி யார்?

10. பிரம்மா முதலான தெய்வங்கள் பலகோடி இருந்தாலும்கூட உன்னைபோன்ற
கண்கண்ட தெய்வம் வேறு உளதோ? சகலகலாவல்லியே! குடைநிழலில் வீற்றிருந்து, நிலவுலகைஆட்சி செய்யும் மன்னர்களும் என்னுடைய பாடல்களைக் கேட்ட உடனே அவர்கள் என்னைப் பணியுமாறு செய்து அருள்வாய்!

வியாதிகள் நீங்க வழிபடவேண்டிய பரிகார ஸ்தலங்கள்


1.ஸ்ரீவாஞ்சிநாத ஸ்வாமி -திருவாஞ்சியம்

2.ஸ்ரீஅகோர ஸ்வாமி -திருக்கடையூர்

3.ஸ்ரீதன்வந்தரி பகவான் -ஸ்ரீரெஙகம்

4.ஸ்ரீவைத்யவீரராகவ ஸ்வாமிகள்-திருவள்ளுர்

5.கற்கடேஸ்வரர் -திருவிசை நல்லூர்

6.ஸ்ரீராகவேந்திரா -புவனகிரி

7.ஸ்ரீஇராமானுஜர் -ஸ்ரீபெரும்புதூர்

8.சிவபெருமான் -திருத்துருத்து

9. சிவபெருமான் -குடவாசல்

10.வைத்தியநாத சுவாமி - வைத்தீஸ்வரன் கோவில்

11.தன்வந்திரி ஜீவசமாதி - வைத்தீஸ்வரன் கோவில்

12.உக்ர நரசிம்மர் -திருக்குறையலூர்

13.யோக நரசிம்மர் -புள்ளிபூதங்குடி

14.நீலகண்டர் -தென்னலங்குடி(குடந்தை-காரைக்கால் சாலை)

15.பஞ்சவர்ணேஸ்வரர்-சுந்தரபெருமாள்கோயில்.கும்பகோணம்


திருக்கோவிலில் தீபம் ஏற்றுதல்


ஒளியில் தேஜஸ் ஆக இருக்கிறேன் என கண்ணபிரான் கீதையில் அருளி உள்ளார்.ஒருவர் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் தருணத்தில் திருக்கோவில் கருவறையில் எரிந்து கொண்டிருக்கும் அணையா விளக்கில் சேர்க்கப்படும் நெய்யானது அவ்வுயிரை காப்பாற்றும் சக்தி வாய்ந்ததாகும்.

எளி அனல் ஏற்றி இறைவனை வழிபட வேண்டும் என திருமூலர் திருமந்திரத்தில் தீபம் ஏற்றுவதனை அருளியுள்ளார்.

திருக்கோவிலில் ஏற்றப்படும் தீபத்தின் ஒளியானது சூரியனின் மூலம் இறைவனை அடைந்து உடனுக்குடன் அதற்க்கான நற்பலன்களை நமக்கு அளிக்கின்றன.

வேதாரண்யம் திருக்கோவில் அணையப்போகும் விளக்கை தூண்டிய எலி மறுபிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாக பிறந்ததாக தல வரலாறு கூறுகின்றது. இதிலிருந்து திருக்கோவில்கலில் ஏற்றப்படும் தீபத்தின் மகிமையை அறிந்து கொள்ளலாம்.

சக்தி வாய்ந்த பரிகாரம்


திருக்கோயிலில் தீபம் ஏற்றுவது மிக சக்தி வாய்ந்தபரிகாரம் ஆகும். அதுவும் அதிகாலை, நண்பகல் (உச்சிவேலை), அந்திபொழுதில் ஏற்றப்படும் தீபங்களுக்கு மிகவும் விஷேச சக்தி உண்டு. அதில் பல சூட்சும ரகசியங்கள் அடங்கி உள்ளன. கோவில்களில் இந்த மூன்று வேளைகளில் ஏற்றப்படும் தீபம் உடனுக்குடன் துன்ப நிவர்த்தியை தரும்.மிக கடுமையான பிரச்சனைகளுக்கு நல்ல சுத்தமான நெய்யை, இறைவனின் கருவறையில் சுடர்விட்டு பிரகாசிக்கும் தூங்கா விளக்கில் சேர்த்து வந்தால் போதும். இத்தகைய தீபம் உடலில் இருந்து பிரிய போகும் ஒரு ஜீவனின் நேரத்தையே தள்ளிப்போடும் அளவிற்கு சக்திவாய்ந்தது ஆகும்.

ஆகவே பல ஆயிரம் செலவு செய்து பரிகாரங்கள் பண்ணுவதைவிட ஒரு நெய்தீபம் பல மடங்கு சிறந்தது.

மஹா சிவராத்ரி பூஜை


[காலம் : பிரதி வருஷம், மாசி மாதம், கிருஷ்ணபக்ஷ சதுர்தசி (மஹா சிவராத்ரி) யன்று, மாலையில் ஸ்நானம், ஸந்த்யா வந்தனம் முதலியவைகளைச் செய்தபின், ராத்திரி வேளையில் சிவராத்ரி பூஜை செய்ய வேண்டும்.)



விக்நேச்வர பூஜை :

(மஞ்சள் பிள்ளையார் செய்துவைத்து, கையில் புஷ்பம் அக்ஷதை எடுத்துக்கொண்டு)

கணாநாம் த்வா கணபதிகும் ஹவாமஹே
கவிம் கவீநாம் உபமச்ரவஸ்தமம்|
ஜ்யேஷ்ட ராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பதே
ஆந : ச்ருண்வந்நூதிபிஸ் ஸீத ஸாதநம்||

அஸ்மிந் ஹரித்ராபிம்பே மஹாகணபதிம் த்யாயாமி
மஹா கணபதிம் ஆவாஹயாமி

மஹாகணாதிபதயே ஆஸநம் ஸமர்ப்பயாமி
" " அர்க்யம் "
" " பாத்யம் "
" " ஆசமநீயம் "
" " ஔபசாரிகஸ்நாநம் "
" " ஸ்நாநாநந்தரம் ஆசமநீயம் "
" " வஸ்த்ரார்த்தம் அக்ஷதாந் "
" " யக்ஞோபவீதார்த்தம் அக்ஷதாந் "
" " கந்தாந் தாரயாமி "
" " கந்தஸ்யோபரி அக்ஷதாந் "
" " அலங்கரணார்த்தம் அக்ஷதாந் "
" " ஹரித்ரா குங்குமம் "

புஷ்பை : பூஜயாமி (புஷ்பம், அக்ஷதையால் மஞ்சள் பிள்ளையாருக்குப் பூஜை செய்யவும்.)

ஓம் ஸுமுகாய நம: ஓம் தூமகேதவே நம:
" ஏகதந்தாய நம: " கணாத்யக்ஷாய நம:
" கபிலாய நம: " பாலசந்த்ராய நம:
" கஜகர்ணகாய நம: " கஜாநநாய நம:
" லம்போதராய நம: " வக்ரதுண்டாய நம:
" விகடாய நம: " ச்சூர்ப்ப கர்னாய நம:
" விக்நராஜாய நம: " ஹேரம்பாய நம:
" கணாதிபாய நம: " ஸ்கந்த பூர்வஜாய நம:

ஓம் மஹாகணாதிபதயே நம: நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி.

தூபார்த்தம், தீபார்த்தம் அக்ஷதாந் ஸமர்ப்பயாமி.
(வெற்றிலை, பாக்கு, பழம், வெல்லம் நிவேதனம் செய்யவும்.)

நிவேதந மந்த்ரங்கள் :

ஓம் பூர்புவஸ்ஸுவ: தத்ஸவிதுர்வரேண்யம் பர்கோதேவஸ்ய தீமஹி, தியோ யோ ந: ப்ரசோதயாத் | தேவஸ்வித : ப்ரஸுவ | ஸத்யம் த்வர்த்தேந பரிஷிஞ்சாமி.

அம்ருதமஸ்து அம்ருதோபஸ்தரணமஸி ஸ்வாஹா, ஓம் ப்ராணாய ஸ்வாஹா, ஓம் அபாநாய ஸ்வாஹா, ஓம் வ்யாநாய ஸ்வாஹா, ஓம் உதாநாய ஸ்வாஹா, ஓம் ஸமாநாய ஸ்வாஹா, ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா.

 ப்ரஹ்மணிம ஆத்மாம்ருதத்வாய | மஹாகணாதிபதயே
குடகண்ட, கதளீபல நிவேதநம் ஸமர்ப்பயாமி.
மத்யே மத்யே பாநீயம் ஸமர்ப்பயாமி. (உத்தராணியில் தீர்த்தம் எடுத்து விடவும்)

அம்ருதாபிதாநமஸி - உத்தராபோச்சநம் ஸமர்ப்பயாமி (உத்தரணியில் தீர்த்தம் எடுத்து விடவும்)

தாம்பூலம் ஸமர்ப்பயாமி (உத்தரணியில் தீர்த்தம் எடுத்து தாம்பூலத்தில் விடவும்) (கற்பூரம் ஏற்ற வேண்டும்.)
நீராஜநம் ஸமர்ப்பயாமி.
நீராஜநாநந்தரம் ஆசமநீயம் ஸமர்ப்பயாமி. (உத்தரணியில் தீர்த்தம் எடுத்து விடவும்)

பிரார்த்தனை :


வக்ரதுண்ட மஹாகாய ஸூர்யகோடி ஸமப்ரப |
அவிக்நம் குரு மே தேவ ஸர்வகார்யேஷு ஸர்வதா|| (ப்ரதக்ஷிணமும் நமஸ்காரமும் செய்யவும்)

கணபதி ப்ரஸாதம் ச்சிரஸா க்ருஹ்ணாமி (கணபதி ப்ரஸாதத்தை சிரஸில் தரித்துக் கொள்ள வேண்டும்)

ப்ராணாயாமம் :


ஓம்பூ: - ஓம்புவ: - ஓம்ஸுவ: - ஓம்மஹ: -
ஓம்ஜந: - ஓம்தப: - ஓம் ஸத்யம் - ஓம் தத்ஸவிதுர்
வரேண்யம் - பர்க்கோ தேவஸ்ய தீமஹி - தியோ யோந:
ப்ரசோதயாத் - ஓமாப: - ஜ்யோதீரஸ: -
அம்ருதம் ப்ரஹ்ம - பூர்ப்புவஸ்ஸுவரோம்.

ஸங்கல்பம் :


அந்தந்த ப்ரதாந பூஜைக்குரிய ஸங்கல்பத்தை அங்கங்கே குறிப்பிட்டதுபோல் செய்யவும்.

விக்நேஸ்வர உத்யாபநம் :


உத்தரணி ஜலத்தால் கையைத் துடைத்துக்கொண்டு,
"விக்நேச்வரம் யதாஸ்த்தாநம் ப்ரதிஷ்டா பயாமி; ச்சோபநர்த்தே க்ஷேமாய புநராகமநாய ச"
என்று மஞ்சள் பிள்ளையாரை வடக்குப் பக்கமாக நகர்த்த வேண்டும்.

ப்ரதாந பூஜை


பூஜா ஆரம்பம் :


சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம் |
ப்ரஸந்நவதநம் த்யாயேத் ஸர்வ விக்நோப ஸாந்தயே ||

ப்ராணாயாமம் :


ஓம்பூ: - ஓம்புவ: - ஓம்ஸுவ: - ஓம்மஹ: -
ஓம்ஜந: - ஓம்தப: - ஓம் ஸத்யம் - ஓம் தத்ஸவிதுர்
வரேண்யம் - பர்க்கோ தேவஸ்ய தீமஹி - தியோ யோந:
ப்ரசோதயாத் - ஓமாப: - ஜ்யோதீரஸ: -
அம்ருதம் ப்ரஹ்ம - பூர்ப்புவஸ்ஸுவரோம்.

ஸங்கல்பம் :

மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேச்வரப்ரீத்யர்த்தம் சுபே சோபநே முஹூர்த்தே, ஆத்யப்ரஹ்மண: த்விதீய ப்ரார்த்தே, ச்வேத வராஹ கல்பே வைவஸ்வத மந்வந்தரே அஷ்டாவிம்சதிதமே கலியுகே, ப்ரதமே பாதே, ஜம்பூத்வீபே, பாரத வர்ஷே, பரத கண்டே, மேரோ: தக்ஷிணே பார்ச்வே, சகாப்தே, அஸ்மிந் வர்த்தமாநே வ்யாவஹாரிகே ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே...நாமஸம்வத்ஸரே உத்தராயனே, சிசிர ருதௌ, கும்ப மாஸே, க்ருஷ்ண பஷே, சதுர்தஸ்யாம் சுபதிதௌ...வாஸர யுக்தாயாம்...நக்ஷத்ர யுக்தாயாம்..., சதுர்தச்யாம் சுபதிதௌ, சிவராத்ரி புண்யகாலே, மம ஜந்மாப்யாஸாத் ஜந்ம ப்ரப்ருதி ஏதத்க்ஷண பர்யந்தம், பல்யே வயஸி, கௌமாரே, யௌவநே, வார்த்தகே ச ஜாக்ரத் ஸ்வப்ந ஸுஷுப்தி அவஸ்தாஸு, மத்யே ஸம்பாவிதாநாம், ஸர்வேஷாம் பாபாநாம், ஸத்ய: அபநோதநார்த்தம், ஸ்ரீ ஸாம்ப ஸதாசிவ ப்ரஸாதேந, ஸகுடும்பஸ்ய மம, தர்மார்த்த காம மோக்ஷ சதுர்வித பல புருஷார்த்த ஸித்யர்த்தம், ஜ்ஞாந வைராக்ய மோஷ ப்ராப்த்யர்த்தம், சிவராத்ரி புண்ய காலே ஸாம்ப பரமேச்வர பூஜாம் கரிஷ்யே. ததங்கம் கலசபூஜாம் ச கரிஷ்யே ||

(அப உபஸ்ப்ருச்ய) ஜலத்தைத் தொட்டு, 'விக்நேச்வரம் யதாஸ்த்தாநம் ப்ரதிஷ்டாபயாமி' என்று சொல்லி, அக்ஷதை புஷ்பம் சேர்த்து மஞ்சள் பிள்ளையாரை வடக்கே நகர்த்தவும்.

கலச பூஜை :


(சந்தனம், குங்குமம், அக்ஷதை இவைகளால் தீர்த்த பாத்திரத்தை அலங்கரித்துக்
கையால் மூடிக்கொண்டு)

கலசஸ்ய முகே விஷ்ணு : கண்டே ருத்ர : ஸமாச்ரித :
மூலே தத்ர ஸ்திதோ ப்ரஹ்மா மத்யே மாத்ருகணா : ஸ்ம்ருதா: ||

குக்ஷெள து ஸாகரா : ஸர்வே ஸப்தத்வீபா வஸுந்தரா |
ருக்வேதோத யஜுர்வேத : ஸாமவேதோப்யதர்வண : ||

அங்கைச்ச ஸஹிதா : ஸர்வே கலசாம்பு ஸமாச்ரிதா : |
ஆயாந்து தேவபூஜார்த்தம் துரிதக்ஷய காரகா : ||

கங்கே யமுநே சைவ கோதாவரி ஸரஸ்வதி :
நர்மதே ஸிந்து காவேரி ஜலேஸ்மிந் ஸந்நிதிம் குரு ||

(என்று ஜபித்து, கலச தீர்த்தம் சிறிதளவு எடுத்து பூஜாத் திரவ்வியங்களையும், தன்னையும்
ப்ரோக்ஷணம் செய்து கொள்க.)

கண்டா பூஜை :


ஆகமார்த்தந்து தேவாநாம் கமநார்த்தந்து ரக்ஷஸாம் |
கண்டாரவம் கரோம்யத்ய தேவதாஹ்வாந லாஞ்ச்சநம். என்று சொல்லி மணியை அடிக்கவும்.

தியானமும் ஆவாஹனமும் :


சந்த்ர கோடி ப்ரதீகாசம் த்ரிணேத்ரம் சந்த்ர பூஷணம் |
ஆபிங்கள ஜடாஜூடம் ரத்ந மௌளி விராஜிதம் ||

நீலக்ரீவம் உதாராங்கம் தாரஹாரோப சோபிதம் |
வரதாபய ஹஸ்தஞ்ச ஹரிணஞ்ச பரச்வதம் ||

ததாநம் நாக வலயம் கேயூராங்கத முத்ரகம் |
வ்யாக்ர சர்ம பரீதாநம் ரத்த ஸிம்ஹாஸந ஸ்திதம் ||

ஆகச்ச தேவதேவேச மர்த்யலோக ஹிதேச்சயா |
பூஜயாமி விதாநேந ப்ரஸந்ந : ஸுமுகோ பவ ||
உமா மஹேச்வரம் த்யாயாமி, ஆவாஹயாமி

ப்ராண ப்ரதிஷ்டை :

(அந்தந்த பூஜைக்குரிய தேவதையை விக்ரஹ மூர்த்தியிலோ, கலசத்திலோ, படம் முதலியவைகளிலோ கீழ்கண்ட வகையில் ப்ராண ப்ரதிஷ்டை செய்ய வேண்டும். தேவதா ப்ரதிமை இருந்தால் பஞ்ச கவ்யத்தால் அந்த ப்ரதிமையைச் சுத்தி செய்து ப்ராணப் ப்ரதிஷ்டை செய்ய வேண்டும். படமாக இருந்தால் ப்ராண ப்ரதிஷ்டை மட்டும் செய்ய வேண்டும்.)

ஓம் அஸ்ய ஸ்ரீ ப்ராணப்ரதிஷ்டா மஹாமந்த்ரஸ்ய, ப்ரஹ்ம விஷ்ணு மஹேச்வரா: ரிஷய:, ருக் யஜூஸ் சாம அதர்வாணி ச்சந்தாம்ஸி || ஸகல ஜகத் ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹார ஹாரிணீ ப்ராண சக்தி: பரா தேவதா |

ஆம் பீஜம், ஹ்ரீம் சக்தி:, க்ரோம் கீலகம். ப்ராண ப்ரதிஷ்டாபநே விநியோக:

ஆம் அங்குஷ்ட்டாப்யாம் நம:, ஹ்ரீம் தர்ஜநீப்யாம் நம:, க்ரோம் மத்யமாப்யாம் நம:

ஆம் அநாமிகாப்யாம் நம:, ஹ்ரீம் கநிஷ்ட்டிகாப்யாம் நம:, க்ரோம் கரதல கரப்ருஷ்ட்டாப்யாம் நம:

ஆம் ஹ்ருதயாய நம:, ஹ்ரீம் சிரஸே ஸ்வாஹா, க்ரோம் சிகாயை வஷட், ஆம் கவசாய ஹும், ஹ்ரீம் நேத்ர த்ரயாய வௌஷட், க்ரோம் அஸ்த்ராய பட், பூர்ப்புவஸ் ஸுவரோமிதி திக்பந்த: ||

த்யாநம் :


ரக்தாம்போதிஸ்த்த போதோல்லஸ தருண
ஸரோஜா திரூடா க்ராப்ஜை:
பாசம் கோதண்ட மிக்ஷூத்பவ மளிகுண-
மப்யங்குசம் பஞ்சபாணாந் |
பிப்ராணாஸ்ருக் கபாலம் த்ரிணயந லஸிதா
பீந வக்ஷோருஹாட்யா
தேவீ பாலார்க்கவர்ணா பவது ஸுககரீ
ப்ராணசக்தி: பரா ந: ||

ஓம் ஆம் ஹ்ரீம் க்ரோம் | க்ரோம் ஹ்ரீம் ஆம் | அம் யம் ரம் லம் வம் சம் ஷம் ஸம் ஹம் ளம் க்ஷம் அஹ : ஹம்ஸ: ஸோஹம், ஸோஹம் ஹம்ஸ: |

அஸ்யாம் மூர்த்தௌ ஜீவஸ்திஷ்ட்டது. அஸ்யாம் மூத்தௌ ஸர்வேந்த்ரியாணி வாங் மநஸ் தவக் சக்ஷுச் ச்ரோத்ர ஜிஹ்வா க்ராண வாக் பாணி பாத பாயூபஸ்த்தாநி இஹாகத்ய ஸ்வஸ்தி ஸுகம் சிரம் திஷ்ட்டந்து ஸ்வாஹா |

(புஷ்பம், அஷ்தை இவைகளைத் தீர்த்தத்துடன் பிம்பத்தின் மீது விடவும்).

அஸுநீதே புநரஸ்மாஸு சக்ஷு: புந: ப்ராணமிஹ நோ தேஹி போகம் | ஜ்யோக் பச்யேம ஸூர்ய மூச்சரந்த மநுமதே ம்ருளயா ந: ஸ்வஸ்தி ||

*ஆவாஹிதோ பவ | ஸ்த்தாபிதோ பவ | ஸந்நிஹிதோ பவ | ஸந்நிருத்தோ பவ | அவகுண்டிதோ பவ | ஸுப்ரீதோ பவ | ஸுப்ரஸந்நோ பவ | ஸுமுகோ பவ | வரதோ பவ | ப்ரஸீத ப்ரஸீத ||

(* ஸ்த்ரீ தேவதையானால் 'ஆவாஹிதா பவ, ஸ்த்தாபிதா பவ.' என்ற வகையில் இங்குள்ள சொற்களை மாற்றிக் கொள்ளவும்.

**ஸ்வாமிந் ஸர்வஜகந்நாத யாவத் பூஜாவளாநகம் | தாவத் த்வம் ப்ரீதி பாவேந பிம்பேஸ்மிந் ஸந்நிதிம் குரு || என்று பிரார்த்தித்து, வாழைப்பழம் போன்ற ஏதாவது ஒன்றை நிவேதநம் செய்யவும்.

(** ஸ்த்ரீ தேவதையானால் 'தேவி ஸர்வ ஜகந்மாத:' என்று மாற்றிக்கொள்ளவும்.)

குறிப்பு : இவ்வாறு பூர்வாங்க பூஜைகளை முடித்தபின் பிரதான பூஜையைத் தொடங்கவேண்டும்.

 பாதாஸநம் குரு ப்ராஜ்ஞ நிர்மலம் ஸ்வர்ண நிர்மிதம் |
பூஷிதம் விவிதை: ரத்நை: குரு த்வம் பாதுகாஸநம் ||
உமாமஹேச்வராய நம:, ரத்நாஸநம் ஸமர்ப்பயாமி.

கங்காதி ஸர்வ தீர்த்தேப்ய: மயா ப்ரார்த்தநயாஹ்ருதம் |
தோயம் ஏதத் ஸுகஸ்பர்சம் பாத்யார்த்தம் ப்ரதிக்ருஹ்யதாம் ||
உமாமஹேச்வராய நம:, பாத்யம் ஸமர்ப்பயாமி.

கந்தோதகேந புஷ்பேண சந்தநேந ஸுகந்திநா |
அர்க்யம் க்ருஹாண தேவேச பக்திம் மே ஹ்யசலாம் குரு ||
உமாமஹேச்வராய நம: அர்க்யம் ஸமர்ப்பயாமி.

கர்பூரோசீர ஸுரபி சீதளம் விமலம் ஜலம் |
கங்காயாஸ்து ஸ்மாநீதம் க்ருஹாணாசமநீயகம் ||
உமாமஹேச்வராய நம: ஆசமநீயம் ஸமர்ப்பயாமி.

ரஸோஸி ரஸ்ய வர்கேஷு ஸுக ரூபோஸி சங்கர |
மது பர்க்கம் ஜகந்நாத தாஸ்யே துப்யம் மஹேச்வர ||
உமாமஹேச்வராய நம: மதுபர்க்கம் ஸமர்ப்பயாமி.

பயோததி க்ருதஞ்சைவ மதுசர்க்கரயா ஸமம் |
பஞ்சாம்ருதேந ஸ்நபநம் காரயே த்வாம் ஜகத்பதே ||
உமாமஹேச்வராய நம: பஞ்சாம்ருத ஸ்நாநம் ஸமர்ப்பயாமி.

மந்தாகிந்யா: ஸமாநீதம் ஹேமாம்போருஹ வாஸிதம் |
ஸ்நாநாய தே மயா பக்த்யா நீரம் ஸ்வீக்ரியதாம் விபோ ||
உமாமஹேச்வராய நம: சுத்தோதகஸ்நாநம் ஸமர்ப்பயாமி.
ஸ்நாநாநந்தரம் ஆசமநீயம் ஸமர்ப்பயாமி.

வஸ்த்ரம் ஸூக்ஷ்மம் துகூலே ச தேவாநாமபி துர்லபம் |
க்ருஹாண த்வம் உமாகாந்த ப்ரஸந்நோ பவ ஸர்வதா ||
உமாமஹேச்வராய நம:, வஸ்த்ரம் ஸமர்ப்பயாமி.

யக்ஞோபவீதம் ஸஹஜம் ப்ரஹ்மணா நிர்மிதம் புரா |
ஆயுஷ்யம் பவ வர்ச்சஸ்யம் உபவீதம் க்ருஹாண போ: ||
உமாமஹேச்வராய நம: யஜ்ஞோபவீதம் ஸமர்ப்பயாமி.

ஸ்ரீகண்டம் சந்தநம் திவ்யம் கந்தாட்யம் ஸுமனோஹரம் |
விலேபநம் ஸுரச்ரேஷ்ட மத்தத்தம் ப்ரதி க்ருஹ்யதாம் ||
உமாமஹேச்வராய நம: கந்தம் ஸமர்ப்பயாமி.

அக்ஷதாந் சந்த்ர வர்ணாபாந் சாலேயாந் ஸதிலாந் சுபாந் |
அலங்காரார்த்தமாநீதாந் தாரயஸ்வ மஹாப்ரபோ ||
உமாமஹேச்வராய நம: அக்ஷதாந் ஸமர்ப்பயாமி.

மால்யாதீநி ஸுகந்தீநி மாலத்யாதீநி வை ப்ரபோ |
மயா ஹ்ருதாநி புஷ்பாணி பூஜார்த்தம் தவ சங்கர ||
உமாமஹேச்வராய நம: புஷ்பமாலாம் ஸமர்ப்பயாமி.

|| அங்க பூஜா ||


சிவாய நம : பாதௌ பூஜயாமி
சர்வாய நம : குல்பௌ "
ருத்ராய நம : ஜாநுநீ "
ஈசாநாய நம ஜங்கே "
பரமாத்மநே நம : ஊரு "
ஹராய நம : ஜகநம் "
ஈச்வராய நம : குஷ்யம் "
ஸ்வர்ண ரேதஸே நம : கடிம் "
மஹேச்வராய நம : நாபிம் "
பரமேச்வராய நம : உதரம் "
ஸ்படிகாபரணாய நம : வக்ஷஸ்தலம் "
த்ரிபுரஹந்த்ரே நம : பாஹூன் "
ஸர்வாஸ்த்ர தாரிணே நம : ஹஸ்தான் "
நீலகண்டாய நம : கண்டம் "
வாசஸ்பதயே நம : முகம் "
த்ரியம்பகாய நம : நேத்ராணி "
பால சந்த்ராய நம : லலாடம் "
கங்காதராய நம : ஜடாமண்டலம் "
ஸதாசிவாய நம : சிர : "
ஸர்வேச்வராய நம : ஸர்வாண்யங்காநி "

(பிறகு அஷ்டோத்திரத்தால் அர்ச்சனை செய்யவும்)

|| சிவாஷ்டோத்தர சத நாமாவளி : ||


ஓம் சிவாய நம : ஓம் வீரபத்ராய நம :
" மஹேச்வராய நம : " கணநாதாய நம :
" சம்மவே நம : " ப்ரஜாபதயே நம :
" பிநாகிநே நம : " ஹிரண்ய ரேதஸே நம :
" சசிசேகராய நம : " துர்த்தர்ஷாய நம :
" வாமதேவாய நம : " கிரீசாய நம : (60)
" விரூபாக்ஷாய நம : " கிரிசாய நம :
" கபர்திநே நம : " அநகாய நம :
" நீலலோஹிதாய நம : " புஜங்க பூஷணாய நம :
" சங்கராய நம : (10) " பர்க்காய நம :
" சூல பாணயே நம : " கிரிதந்வநே நம :
" கட்வாங்கிநே நம : " கிரிப்ரியாய நம :
" விஷ்ணுவல்லபாய நம : " க்ரித்திவாஸஸே நம :
" சிபிவிஷ்டாய நம : " புராராதயே நம :
" அம்பிகா நாதாய நம : " பகவதே நம :
" ஸ்ரீ கண்டாய நம : " ப்ரமதாதிபாய நம : (70)
" பக்தவத்ஸலாய நம : " ம்ருத்யுஞ்ஜயாய நம :
" பவாய நம : " ஸூக்ஷம தநவே நம :
" சர்வாய நம : " ஜகத் வ்யாபிநே நம :
" த்ரிலோகேசாய நம : (20) " ஜகத் குரவே நம :
" சிதி கண்டாய நம : " வ்யோம கேசாய நம :
" சிவா ப்ரியாய நம : " மஹாஸேந ஜநகாய நம :
" உக்ராய நம : " சாரு விக்ரமாய நம :
" கபர்திநே நம : " ருத்ராய நம :
" காமாரயே நம : " பூத பதயே நம :
" அந்தகாஸுர ஸூதநாய நம : " ஸ்தாணவே நம : (80)
" கங்காதராய நம : " அஹிர்புத்ந்யாய நம :
" லலாடாக்ஷாய நம : " திகம்பராய நம :
" கால காலாய நம : " அஷ்டமூர்த்தயே நம :
" க்ருபா நிதயே நம : (30) " அநேகாத்மநே நம :
" பீமாய நம : " ஸாத்விகாய நம :
" பரசு ஹஸ்தாய நம : " சுத்த விக்ரஹாய நம :
" ம்ருகபாணயே நம : " சாச்வதாய நம :
" ஜடாதராய நம : " கண்ட பரசவே நம :
" கைலாஸ வாஸிநே நம : " அஜாய நம :
" கவசிநே நம : " பாப விமோசநாய நம : (90)
" கடோராய நம : " ம்ருடாய நம :
" த்ரிபுராந்தகாய நம : " பசுபதயே நம :
" வ்ருஷாங்காய நம : " தேவாய நம :
" வ்ருஷபாரூடாய நம : (40) " மஹா தேவாய நம :
" பஸ்மோதூளித விக்ரஹாய நம : " அவ்யயாய நம :
" சாம ப்ரியாய நம : " ஹரயே நம :
" ஸ்வரமயாய நம : " பகநேத்ரபிதே நம :
" த்ரயீமூர்த்தயே நம : " அவ்யக்தாய நம :
" அநீச்வராய நம : " தக்ஷாத்வரஹராய நம :
" ஸர்வஜ்ஞாய நம : " ஹராய நம : (100)
" பரமாத்மநே நம : " பூஷதந்தபிதே நம :
" சோம ஸூர்யாக்நி லோசநாய நம : " அவ்யக்ராய நம :
" ஹவிஷே நம : " ஸஹஸ்ராக்ஷாய நம :
" யஜ்ஞ மயாய நம : (50) " ஸஹஸ்ரபதே நம :
" ஸோமாய நம : " அபவர்க்க ப்ரதாய நம :
" பஞ்சவக்த்ராய நம : " அநந்தாய நம :
" ஸதாசிவாய நம : " தாரகாய நம :
" விச்வேச்வராய நம : " பரமேச்வராய நம : (108)

ஸாம்ப பரமேச்வராய நம :, நாநாவித பரிமளாத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி ||

உத்தராங்க பூஜை


வநஸ்பதிரஸோத்பூத : கந்தாட்யச்ச மநோஹர : |
ஆக்ரேய : ஸர்வதேவாநாம் தூபோயம் ப்ரதிக்ருஹ்யதாம் ||
உமாமஹேச்வராய நம:, தூபம் ஆக்ராபயாமி.

ஸாஜ்யம் த்ரிவர்த்தி ஸம்யுக்தம் வஹ்நிநா யோஜிதம் மயா |
தீபம் க்ருஹாண தேவேச த்ரைலோக்ய திமிராபஹம் ||
உமாமஹேச்வராய நம:, தீபம் தர்சயாமி.

நைவேத்யம் க்ருஹ்யதாம் தேவ பக்திம் மே ஹ்யசலாம் குரு |
சிவேப்ஸிதம் வரம் தேஹி பரத்ர ச ப்ராம் கதிம் ||
உமாமஹேச்வராய நம:, மஹாநைவேத்யம் ஸமர்ப்பயாமி.

ஓம் பூர்ப்புவஸ்ஸுவ: தத்ஸவிதுர்வரேண்யம், பர்க்கோ தேவஸ்ய தீமஹி, தியோ யோந: ப்ரசோதயாத், ஓம் தேவ ஸவித : ப்ரஸுவ, ஸத்யம் த்வர்த்தேந பரிஷிஞ்சாமி, அம்ருதோபஸ்தரண மஸி. ஓம் ப்ராணாயஸ்வாஹா, ஓம் அபாநாயஸ்வாஹா, ஓம் வ்யாநாயஸ்வாஹா, ஓம் உதாநாய ஸ்வாஹா, ஓம் ஸமாநாயஸ்வாஹா, ஓம் ப்ரஹ்மணேஸ்வாஹா, ப்ரஹ்மணி ம ஆத்மா அம்ருதத்வாய.

அம்ருதாபிதாநமஸி.
நைவேத்யாநந்தரம் ஆசமநீயம் ஸமர்ப்பயாமி.

பூகீபல ஸமாயுக்தம் நாகவல்லீ தளைர் யுதம் |
கர்ப்பூர சூர்ண ஸம்யுக்தம் தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம் ||
உமாமஹேச்வராய நம:, கர்ப்பூர தாம்பூலம் ஸமர்ப்பயாமி.

சக்ஷுர்தம் ஸர்வலோகாநாம் திமிரஸ்ய நிவாரணம் |
ஆர்திக்யம் கல்பிதம் பக்த்யா க்ருஹாண பரமேச்வர ||
உமாமஹேச்வராய நம:, கர்ப்பூர நீராஜனம் ஸமர்ப்பயாமி.
ஆசமநீயம் ஸமர்ப்பயாமி.

யாநி காநிச பாபாநி ஜந்மாந்தர க்ருதானி ச |
தாநி தாநி விநச்யந்தி ப்ரதக்ஷிண பதே பதே ||
உமாமஹேச்வராய நம:, பரதக்ஷிணம் ஸம்ர்ப்பயாமி.

புஷ்பாஞ்ஜலிம் ப்ரதாஸ்யாமி க்ருஹாண கருணாநிதே |
நீலகண்ட விரூபாக்ஷ வாமார்த்த கிரிஜ ப்ரபோ ||
உமாமஹேச்வராய நம: புஷ்பாஞ்ஜலிம் ஸமர்ப்பயாமி.
மந்த்ரபுஷ்பம் ஸுவர்ணபுஷ்பம் ஸமர்ப்பயாமி.

மந்த்ரஹீநம் க்ரியாஹீநம் பக்திஹீநம் ஸுரேச்வர |
யத்பூஜிதம் மயா தேவ பரிபூரணம் ததஸ்து தே ||

வந்தே சம்புமுமாபதிம் ஸுரகுரும் வந்தே ஜகத்காரணம்
வந்தே பந்நகபூஷணம் ம்ருகதரம் வந்தே பசூநாம் பதிம் |
வந்தே ஸூர்ய சசாங்க வஹ்நி நயநம் வந்தே முகுந்த ப்ரியம்
வந்தே பக்த ஜநாச்ரயஞ்ச வரதம் வந்தே சிவம் சங்கரம் ||

நமச்சிவாய ஸாம்பாய ஸகணாய ஸஸூநவே |
ஸநந்திநே ஸகங்காய ஸவ்ருஷாய நமோ நம: ||

நமச்சிவாப்யாம் நவ யௌவநாப்யாம்
பரஸ்பராச்லிஷ்ட வபுர் தராப்யாம் |
நகேந்த்ர கந்யா வ்ருஷ கேதநாப்யாம்
நமோ நமச்சங்கர பார்வதீப்யாம் ||

அர்க்யம் :


சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம் |
ப்ரஸந்நவதநம் த்யாயேத் ஸர்வவிக்நோப சாந்தயே ||

மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா பரமேச்வர ப்ரீத்யர்த்தம், மயா
சரித சிவராத்ரி வ்ரதபூஜாந்தே க்ஷீரார்க்ய ப்ரதாநம், உபாயநதாநஞ்ச் கரிஷ்யே ||

நமோ விச்வஸ்வரூபாய விச்வஸ்ருஷ்ட்யாதி காரக |
கங்காதர நமஸ்துப்யம் க்ருஹாணார்க்யம் மயார்ப்பிதம் ||
உமாமஹேச்வராய நம:, இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம் |

நமச்சிவாய சாந்தாய ஸர்வபாபஹராயச |
சிவராத்ரௌ மயா தத்தம் க்ருஹாணார்க்யம் ப்ரஸீத மே ||
உமாமஹேச்வராய நம:, இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம் |

துக்க தாரித்ர்ய பாபைச்ச தக்தோஹம் பார்வதீபதே |
மாம் த்வம் பாஹி மஹாபாஹோ க்ருஹாணார்க்யம் நமோஸ்து தே ||
உமாமஹேச்வராய நம:, இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம் |

சிவாய சிவரூபாய பக்தாநாம் சிவதாயக |
இதமர்க்யம் ப்ரதாஸ்யாமி ப்ரஸந்தோ பவ ஸர்வதா ||
உமாமஹேச்வராய நம:, இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம் |

அம்பிகாயை நமஸ்துப்யம் நமஸ்தே தேவி பார்வதி |
அம்பிகே வரதே தேவி க்ருஹ்ணீதார்க்யம் ப்ரஸீத மே ||
பார்வத்யை நம:, இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம் |

ஸுப்ரஹ்மண்ய மஹாபாக கார்த்திகேய ஸுரேச்வர |
இதமர்க்யம் ப்ரதாஸ்யாமி ஸுப்ரீதோ வரதோ பவ ||
ஸுப்ரஹ்மண்யாய நம:, இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம் |

சண்டிகேசாய நம:, இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம் |

அநேந அர்க்ய ப்ரதாநேந பகவாந் ஸர்வதேவதாத்மக:
ஸபரிவார ஸாம்ப பரமேச்வர: ப்ரீயதாம் ||

உபாயந தாநம் :

ஸாம்பசிவ ஸ்வரூபஸ்ய ப்ராஹ்மணஸ்ய இதமாஸநம், அமீதே கந்தா: (தாம்பூலம் தக்ஷிணை, வாயநம் ஆகியவற்றைக் கீழ்க்கண்ட மந்த்ரம் சொல்லித் தர வேண்டும்.)

 ஹிரண்யகர்ப்ப கர்ப்பஸ்தம் ஹேமபீஜம் விபாவஸோ: |
அநந்தபுண்ய பலதம் அத: சாந்திம் ப்ரயச்ச மே ||

இதமுபாயநம் ஸதக்ஷிணாகம் ஸதாம்பூலம் ஸாம்பசிவ ப்ரீதிம்
காமயமாந: துப்யமஹம் ஸம்ப்ரததே ந மம|| (நமஸ்காரம் செய்யவும்)


|| ஓம் தத்ஸத் ப்ரஹ்மார்ப்பணமஸ்து ||

ஸ்ரீ பைரவர் வழிபாடும் மந்திரங்களும்

சொர்ணாகர்ஷண பைரவர் ஸ்தோத்திரம்:

”ஓம் ஏம் க்லாம் க்லீம் க்லூம் ஹ்ராம் ஹ்ரீம்
ஹ்ரூம்ஸக: வம் ஆபத்துத்தாரணாய
அஜாமிலா பத்தாய லோகேஸ்வராய
ஸ்வர்ணாகர்ஷண பைரவாய
மம தாரித்தர்ய வித்வேஷணாய
ஓம் ஸ்ரீம் மஹா பைரவாய நம:”

இந்த மந்திரத்தை தினம் தோறும், பைரவரை வழிபட்டுப் பாராயணம் செய்து வந்தால் செல்வ வளம் பெருகும். கடன்கள் தீரும்.


3.வடுக பைரவ மூல மந்த்ரம்:

”ஓம் ஹ்ரீம் வம் வடுகாய ஆபத்துத்தாரணம்
குருகுரு வம் வடுகாய ஹ்ரீம் ஓம் ஸ்வாஹா”

சர்வ சத்ரு நாசத்திற்கும் ஆபத்துகள் விலகவும் மேற்கண்ட மந்திரம்.

4.பைரவ காயத்ரி 1:

”ஓம் சூல ஹஸ்தாய வித்மஹே ஸ்வாந வாஹாய தீமஹி
தந்நோ பைரவ: ப்ரசோதயாத்”

இது நம்மைத் துன்பங்கள், துயரங்கள் அணுகாமல் இருக்க…

பைரவர் காயத்ரி 2:

”ஓம் திகம்பராய வித்மஹே தீர்கதிஷணாய தீமஹி தந்நோ பைரவ: ப்ரசோதயாத்”

நீடித்த ஆயுளுக்கும், பகைவர்கள் தொல்லை அணுகாமல் இருக்கவும் மேற்கண்ட மந்திரம்.

தானத்தின் பலன்கள்:

அன்னதானம்- வறுமையும் கடன்களும் நீங்குகின்றன.

பூமிதானம்- பிரம்ம லோகத்தையும் ஈஸ்வர தரிசனத்தையும் அளிக்கும்.

கோதானம்- ரிஷிக்கடன், தேவகடன், பித்ருக்கடன் ஆகியவற்றைப் போக்குவிக்கும்.

வஸ்திரதானம்- ஆயுளை விருத்தி செய்யும்.

தீப தானம்- கண்பார்வையை தீர்க்கமாக்கும். பித்ருக்களை இருட்டிலிருந்து வெளிச்சத்துக்குக் கொண்டு வரும்.

தேன் தானம்- புத்திர பாக்கியம் உண்டாக்கும்.



அரிசி தானம்- பாவங்களைப் போக்கும்.

தயிர் தானம்- இந்திரிய விருத்தி உண்டாக்கும்.

நெய் தானம்- நோய்களை நிவர்த்தி செய்யும்.

நெல்லிக்கனி தானம்- ஞானம் உண்டாக்கும்.

பால் தானம்- துக்கம் நீக்கும்.

தேங்காய் தானம்- பூரணநலன் உண்டாக்கும். நினைத்த காரியத்தில் வெற்றியளிக்கும்.

தங்க தானம்- குடும்ப தோஷம் நிவர்த்தி செய்யும்.

வெள்ளி தானம்- மனக்கவலை நீக்கும்.

பழங்கள் தானம்- புத்தியும் சித்தியும் தரும்.

கல்வியில் சிறந்து விளங்க ஹயக்ரீவர் மூல மந்திரம் ;



உக்தீத ப்ரண வோத்கீத
ஸர்வ வாகீச்வரேச்வர
ஸர்வ வேத மயோச்ந்த்ய
ஸர்வம் போதய போதய

ஹயக்ரீவர் காயத்ரீ மந்திரம்

ஓம் தம் வாகீச்வராய வித்மஹே
ஹயக்ரீவாய தீமஹி
தந்நோ ஹஸெள ப்ரசோதயாத் !


ஹயக்ரீவர் ஸ்லோகம்:

1.ஞானானந்தமயம் தேவம்
நிர்மல ஸ்படிகாக்ருதிம்
ஆதாரம் ஸர்வ வித்யானாம்
ஹயக்ரீவ முபாஸ்மஹே

2.சங்க சக்ர மஹாமுத்ரா
புஸ்தகாட்யம் சர்ர்பஜம் சம்பூர்ணம்
சந்ர ஸங்காச ஹயக்ரீவம் உபாஸ்மஹே

சரஸ்வதி காயத்ரி:



ஓம் வாக் தேவ்யை ச வித்மஹே
விரிஞ்சி பத்ந்யை ச தீமஹி
தந்நோ வாணி ப்ரச்சோதயாத்

ஓம் வாக் தேவீச வித்மஹே
ஸர்வ ஸித்தீச தீமஹி
தந்நோ வாணீ ப்ரசோதயாத்



மேற்கண்ட ஸ்லோகத்தை சொன்னால் அன்னை சரஸ்வதியின் அருள் பூரணமாக கிடைக்கும்

விளக்குத்திரி தரும் பலன்கள்.

1. பஞ்சுத்திரி - வீட்டில் மங்களம் நிலைக்கும்.
2. தாமரைத்தண்டுத்திரி - முன்வினைப் பாவம் நீக்கும். செல்வம் தரும்.
3. வாழைத்தண்டுத்திரி - தெய்வ குற்றம் நீக்கி மனச் சாந்தி தரும். புத்திரபேறு உண்டாகும்.
4. வெள்ளெருக்கன் பட்டைத்திரி - வறுமையைப் போக்கும். கடன் தொல்லை தீரும். பெருத்த செல்வம் சேரும்.

விளக்கேற்றும் திசைகள்


1. வடக்குத்திசை - தொழில் அபிவிருத்தி. செல்வம் சேரும்.
2. கிழக்குத்திசை - சகல சம்பத்தும் கிடைக்கும்.
3. மேற்குத்திசை - கடன்கள் தீரும். நோய் அகலும்.
4. தெற்குத்திசை - இந்த திசையில் தீபம் ஏற்றக்கூடாது

விளக்கேற்றும் எண்ணெய் வகைகள்.

1. பசு நெய் - மோட்சம் கிடைக்கும். பாவங்கள் தீரும். மகாலட்சுமி அருள் கிடைக்கும்.

2. விளக்கெண்ணெய் - குடும்ப சுகம் சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.

3. இலுப்பையெண்ணெய் - குலதெய்வ அருள் கிடைக்கும். முன்னோர் சாபங்கள், முற்பிறவிப் பாவங்கள் நீங்கும்.

4. நல்லெண்ணெய் - கடன்கள் தீரும். நோய்கள் நீங்கும்.

5. தேங்காயெண்ணெய் - வினாயகரிற்கு மட்டும் தான் இதில் தீபமேற்ற வேண்டும். திருமணத்தடை நீங்கும்.

6. முக்கூட்டு எண்ணெய் - பசுநெய், விளக்கெண்ணெய், இலுப்பையெண்ணெய் மூன்றும் சமஅளவில் கலந்தது முக்கூட்டெண்ணெயாகும். இதில் தீபம் ஏற்றுவதால் தேவ ஆகர்~ணம் குடும்பத்தில் அமைதி உண்டாகும். செல்வம் சேரும்.




ஐந்தெண்ணெய் தயாரிக்கும் போது வேப்பெண்ணெய் சேர்க்கக்கூடாது. பசுநெய்யுடன் நல்ணெ;ணெய் கலப்பதும் தவறானது. எந்த காரணத்தைக் கொண்டும் கடலையெண்ணெய், சன் ஆயில் கொண்டு தீபம் ஏற்றக்கூடாது. இதனால் தெய்வ சாபம், தரித்திரம் உண்டாகும்

திசைகளும் – தீபங்களும்:

நெய்:
தீபத்திற்கு [விளக்கிற்கு] நெய்விட்டு தீபம் ஏற்றுவது மிகச் சிறப்பு. சகலவித செல்வ சுகத்தையும் இல்லத்திற்கும் – இல்லறத்திற்கும் நலனை தருகிறது.

நல்லெண்ணெய்:
நல்லெண்ணெயில் தீபமிடுவதால் சகல பீடைகளும் விலகிவிடும்.

விளக்கெண்ணெய்:
தேவதா, வசியம், புகழ், ஜீவன சுகம், சுற்றத்தார் சுகம், தாம்பத்திய சுகம் விருத்தி செய்கிறது.

திரியின் வகையில் பஞ்சு
இலவம் பஞ்சு திரித்துப் போடுவது மிகவும் நல்லது.

தாமரைத் தண்டு:
தாமரை தண்டு திரிந்து ஏற்றுவது முன் வினைப் பாவத்தைப் போக்கும்.
செல்வம் நிலைத்து நிற்கும்.
[ வாழை தண்டில் திரியிலிடுவது சிறப்பு]

துணி:
புது வெள்ளை துணியில் [அல்லது வெள்ளை வேட்டி] பன்னீரில் நனைந்து காய
வைத்து திரியாக பயன் படுத்த உத்தம பலனை காணலாம்.



திசைகளும் பலனும்

கிழக்கு
கிழக்கு திசை தீபம் ஏற்றி வழிபட்டால் துன்பம் ஒழியும் , பீடைகள் அகலும்.

மேற்கு:
மேற்கு திசையில் தீபம் ஏற்றி வழிபடக் கடன் தொல்லை , சனி பீடை, கிரக தோஷம்
நீங்கும்.

வடக்கு:
வட திசையில் தீபம் ஏற்ற திரண்ட செல்வமும், திருமணத் தடையும், சுபகாரியத் தடை,
கல்வி தடை நீங்கும். சர்வ மங்களமும் உண்டாகும்.

வேப்பெண்ணை, நெய், இலுப்பை எண்ணெய் இவை மூன்றும் கலந்து தீபமிடுவதனால்
செல்வம் உண்டாகும். இது குல தெய்வத்திற்கு உகந்தது.

நெய், விளக்கெண்ணெய், வேப்பெண்ணெய், இலுப்பை எண்ணெய், தேய்காய் எண்ணெய்
இந்த ஐந்து எண்ணெய் சேர்கையில் 45 நாட்கள் பூசை செய்கிறோரோ அவருக்கு தேவியின் அருள் சக்தி உண்டாகும்.

இறைவனுக்கு உகந்த எண்ணெய்:

மஹாலட்சுமி : நெய்.
நாராயணன் : நல்லெண்ணெய்

குழந்தைபேறு உண்டாக


கர்ப ரக்ஷாம்பிகை கோவிலில் அம்பிகைக்கு அர்ச்சனை சையது புடவை
சாற்ற வேண்டும். .
துளசி கணுக்களை விஷ்ணு ஆலயத்திலும் வில்வ கணக்குகளை சிவா
ஆலயத்திலும் நட்டு வைத்தால் புத்ர தோஷம் விலகும்.


குழந்தை பேறு வழிபடவேண்டிய பரிகார ஸ்தலங்கள் :

1.தொட்டமளுர் -கண்ணன்
2.கர்ப்பகரட்சாம்பிகை -திருகருகாவூர்
3.தாயுமானவர் சன்னதி -திருச்சி
4.ஸ்ரீரெங்கநாத பெருமாள் -ஸ்ரீரங்கம்
5.பெருமாள்-மணக்கால் ஐயம்பேட்டை (திருவாரூர் அருகில்)
6.பெருமாள்-திருவெள்ளியங்குடி (குடந்தை அருகில்)
7.ஸ்ரீராமானஜர்-ஸ்ரீபெரும்புதூர்.காலசர்பதோஷம்-ராகு-கேது.

ராகவேந்திரர் இயற்றிய சுந்தரகாண்ட ஸ்லோகம்



யஸ்ய ஸ்ரீஹனுமானனுக்ரஹபலாத்


தீர்ணாம்புதிர் லீலயா


லங்காம்ப்ராப்ய நிஸாம்ய ராமதயிதாம்


பங்க்த்வா வனம் ராக்ஷ ஸான்!


அக்ஷ?980;ீன் விநிஹத்ய வீக்ஷ்யதஸகம்


தக்த்வா புரீம் தாம் புன:


தீர்ணாப்தி: கபிபிர்யுதே


யமனமத்தம் ராமசந்த்ரம் பஜே!


பொருள்: யாருடைய அருளின் வலிமை யால் அனுமன் எந்தவொரு அயர்ச்சியும், களைப்பும் இல்லாமல் கடலைத் தாண்டி ராமபிரானின் அன்புக்குரிய சீதாதேவியைக் கண்டாரோ, யாருடைய அருளால் அசோக வனத்தை சேதப்படுத்தினாரோ, அக்ஷகுமாரன் முதலிய அரக்கர்களைக் கொன்று ராவணனைக் கண்டு, இலங்கையை தீக்கிரையாக்கினாரோ, யாருடைய அருளால் மறுபடியும் கடலைத் தாண்டினாரோ, மகேந்திர மலையில் இருக்கும் வானரங் களுடன் சாஷ்டாங்கமாய் யாரை வணங்கினாரோ அப்படிப்பட்ட ஸ்ரீராமச் சந்திர மூர்த்தியை நான் வணங்குகிறேன்.